சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் 29, 30 மற்றும் 1ஆம் திகதிகளில் நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்லதாகவும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நவம்பவர் மாதம் 27ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 21ஆம் திகதியும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 23ஆம் திகதியும், நவம்பர் 29ஆம் திகதிக்கான பரீட்சை டிசம்பர் 27ஆம் திகதி இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நவம்பர் 30ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை, டிசம்பர் 28ஆம் திகதியும் டிசம்பர் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த் பரீட்சை, டிசம்பர் 30ஆம் திகதியும், டிசம்பர் 3ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31ஆம் திகதியும் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.