ஐ.பி.எல் தொடர்பான விசேட அறிவித்தல்

tubetamil
0

 டுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. 



இதுவரை இல்லாத வகையில் ஐ.பி.எல். போட்டியின் அடுத்த 3 சீசன்களுக்கான திகதிகளை வெளியிட்டுள்ளது.


அதன்படி வருகிற மார்ச் 14-ஆம் திகதி 18-வது சீசன் போட்டி தொடங்குகிறது.


மே மாதம் 25 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


அத்துடன் 2026-ம் ஆண்டு சீசன் மார்ச் 15 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலும், 2027-ம் ஆண்டு சீசன் மார்ச் 14-ஆம் திகதி முதல் மே மாதம் 30 ஆம் திகதி வரையிலும் நடை பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 3 சீசன்களைப் போலவே 2025-ம் ஆண்டு சீசனிலும் 74 போட்டிகள் இருக்கும். போட்டிக்கான திகதி குறித்து இன்று காலை அணி உரிமையாளர்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. 


போட்டிக்கான இடம், யார்-யார் எந்த திகதியில் மோதுவது உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 


குறித்த நிதி வேளை ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 574 பேர் இடம் பெற்றனர். இதில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 10 அணிகள் மொத்தம் 204 இடங்களை நிரப்ப வேண்டும், அவற்றில் 70 வெளிநாட்டு வீரர்களுக்கானது.


இந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஏல பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரது அடிப்படை விலை குறித்து தெரிவிக்கப்படவில்லை.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top