இஸ்ரேல் தாக்குதலின் விளைவு - அமெரிக்காவின் ஆதரவை இழக்கும் ஈரான்!

tubetamil
0

 ஈரான் (Iran) மீது நடாத்தப்பட்ட இஸ்ரேலின் அது மீறிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (Ali Khamenei) உத்தரவிட்டுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது நடாத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட இராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது.


இஸ்ரேலின் இந்த தாக்குதலினால் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையிலேயே ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 


இது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலில் பலியான வீரர்களின் உறவினர்களை சந்தித்த அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலுக்கு வலியை புரிய வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என கூறியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.


இவ்வாறான நிலையில்  இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளான மேத்யூ மில்லர், “எங்கள் எச்சரிக்கையை மீறி ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுப்போம்.


மத்திய கிழக்கில் பதட்டத்தை அதிகரிக்க வேண்டாம் என ஈரானுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.









Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top