உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அப்பதவியிலிருந்து நீக்கக் கோரி ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று (19) முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளன.
இன்று காலை 09 மணிக்கு பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தற்போது பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது