நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு தேர்தலுக்கு பின்னரான காலம் நடைமுறையில் இருக்கும் என பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்திய அவர் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாடு முழுவதும் பொலிஸார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்லதாவும் தெரிவித்துள்ளார்.
தற்போது தேர்தலுக்குப் பின்னரான காலம் ஆரம்பிப்பதுடன் ஒரு வார காலப்பகுதியில், பொது இடங்களில் எந்தவிதமான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பேரணியை நடத்த முடியாது.
எனவே, இந்த காலகட்டத்தில் பொலிஸார் நாடு முழுவதும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரத்தியேகமாக அடையாளம் காணப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.