அரச குடியிருப்புக்களை ஒப்படைக்க தயங்கிய நான்கு அரசியல்வாதிகள்

tubetamil
0

 மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சின் அறிவிப்பின் படி முன்னாள் அமைச்சர்கள் உட்பட நான்கு முன்னணி அரசியல்வாதிகள் இதுவரை தமது அரசாங்க குடியிருப்புகளை ஒப்படைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.



முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த சனத் நிஷாந்த, முன்னாள் இராஜாங்க அமைச்சர் மொஹான் பி டி சில்வா, முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகளே கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது 


அத்துடன் மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் வசித்து வருவதாகவும், பல தடவைகள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட போதிலும், அவர்கள் இன்னும் அங்கேயே தங்கியிருப்பதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.


எதிர்காலத்தில் அமைச்சின் செயலாளருடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top