நடிகர் தனுஷ் அப்பாவி போல் நடிக்கிறார் - கடுப்பாக நயன்தாரா எழுதிய கடிதம்

tubetamil
0

 நடிகை நயன்தாரா நடிகர் தனுஷிற்கு வெளிப்படையாக எழுதியுள்ள ஓர் கடிதம் ஒன்று தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. 



நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் வெளியாகவுள்ளது.


இந்த ஆவணப்படம் நயன்தாராவின் திருமணம் முடிந்ததோடு வெளிவரவிருந்தது. ஆனால் இது வெளிவராமல் இருந்தமைக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.  




இந்நிலையில், தற்போது தனுஷை கடும் கோபத்துடன் விளாசியுள்ளார் நயன்தாரா.


மூன்று பக்கங்கள் கொண்ட ஓர் அறிக்கையின் மூலம் நடிகர் தனுஷ் குறித்தும், ஏன் Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் தாமதமானது என்பது குறித்தும் நடிகை நயன்தாரா தெரியப்படுத்தியுள்ளார்.


அதில் தனுஷ் தனது தந்தை மற்றும் அண்ணனின் துணையுடன் சினிமாவிற்கு வந்தவர் என்றும், தான் தனி ஒரு பெண்ணாக எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.



அதில் மேலும் தெரிவிக்கையில், 

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம். என தெரிவித்துள்ளார்.


அதிலும் , தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.



கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்" என நயன்தாரா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top