வைத்திய நிபுணர் சாபி சிஹாப்தீனுக்கு விடுதலை!

tubetamil
0

 சட்டவிரோத கருத்தடை தொடர்பில் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விசேட வைத்திய நிபுணர், சாபி சிஹாப்தீனை குருநாகல் நீதவான் நீதிமன்றம் விடுவித்துள்ளது.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


முறைப்பாடு செய்தவர்கள் தமது குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறியதன் காரணமாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரிலும், குருநாகல் நீதவான் பந்துல குணரத்ன, சாபி சிஹாப்தீனை சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு இன்று(06) உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ,சிஹாப்தீன் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.


இதன் பின்னர், பெண்களின் அனுமதியின்றி கருத்தடை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.



மேலும் சிஹாப்தீன் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவித்ததாகவும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.


எனினும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து அவர் குருநாகல் பிரதான நீதவானால் முன்னதாக பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top