நபரொருவர் தனது தாயின் மூன்று விரல்களை மரக்கட்டை ஒன்றின் மீது வைத்து வெட்டிய சம்பவம் ஒன்று வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தபானாகல, புபுதுவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு கொடூர செயலை செய்தவர் , பின்னர் தனது சகோதரியை கத்தியால் தாக்கி படுகாயமடையச் செய்துள்ளார்.
அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான தாய் மற்றும் சகோதரி சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாயார் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள்ளனர்.
குறித்த இதே வீக்லி அந்த நபரை பொலிஸார் தற்போது கைது செய்துள்ளதுடன், அவர் 30 வயதுடையவர் எனவும் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.