நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி கல்விச் செயற்பாடுகளுக்காக திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.