மலையாள திரையுலகில் பிரபலமான வில்லன் நடிகரான நடிகர் மேகநாதன் காலமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆரம்ப காலகட்டத்தில் 1983ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த “அஷ்த்ரம்” என்ற படத்தில் அறிமுகமாயுள்ளதுடன் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த வந்த மேகநாதன், பிறகு வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இப்படியாக 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார்.அத்துடன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து நடித்துள்ளார்.
இதற்கிடையில், மேகநாதன் “சுஸ்மிதா” என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பார்வதி என்ற மகளும் இருக்கிறார்.
தற்போது 60 வயதில் இருக்கும் மேகநாதன் சுவாச கோளாறு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில், நேற்றைய தினம் உயிரிழந்து விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.