யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிப் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் வைத்து கடந்த புதன்கிழமை பூசகரைத் தாக்கி பணம், நகை அபகரித்த குழுவை சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, பூசகரிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரைப் பவுண் சங்கிலி, நாற்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் பூசகருடைய சங்கிலியை விற்றுப் பெற்ற இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபா பணம் ஆகியவற்றை பொலிஸார் மீட்டதுடன் பெண் ஒருவர் உட்பட மூவரைக் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த மூவரே இவ்வாறு திருட்டுச் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.