தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராகவும், வசூல் நாயகனாகவும் கொண்டாடப்பட்டு வரும் தவிர்க்க முடியாத நாயகனாக சிவகார்த்திகேயன் மாறியுள்ளார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அமரன், உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார்
இவ்வாறான நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
இதில் " நான் ஒரு Mock(கேலி) விருது விழா ஒன்றில் அனைத்து பிரபலங்களையும் கலாய்க்கும் வகையில் நான் சில விஷயங்களை செய்தேன். அதில் சிவகார்த்திகேயன் மேடை ஒன்றில் எமோஷனலாக பேசியதை பற்றி கேலி கிண்டல் செய்யும் விதத்தில் நான் பேசிவிட்டேன்.
அது அப்போது என தவறாக தெரியவில்லை. அதை நான் தொலைக்காட்சியில் பார்க்கும்பொழுது என தவறாக தெரிந்தது. அதனால் உடனடியாக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்" என ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.