அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் காதலியின் தலைமுடி அலங்காரம் தனக்கு பிடிக்காததால் அவரை கத்தியால் குத்தி காதலன் கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அத்துடன் குறித்த சம்பவத்தின் போது தடுக்க முயன்ற அண்ணனையும் கத்தியால் சந்தேக நபர் குத்தியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார், கையில் ரத்தம் படிந்த கத்தியுடன் இருந்த 49 வயதான பெஞ்சமினை கைது செய்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்தில் இறந்து கிடந்த காதலியையும் காயமடைந்த அண்ணனையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அவர்களது மகள் அளித்த முறைப்பாட்டில், ஒருநாள் முன்னர் 50 வயதான கார்மென் மார்டினெஸ்-சில்வா முடி திருத்தம் செய்துள்ளார்.
அந்த புதிய ஹேர் ஸ்டைலுடன் அவர் வீடு திரும்பினார். வீட்டிலிருந்த அவரது காதலனுக்கு இந்த ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. இதனால் காதலி பயந்து, தன் மகளின் வீட்டில் இரவைக் கழிக்க முடிவு செய்துள்ளார்.
இருப்பினும், தனது காதலனால் மிகவும் பயந்துடன் இருந்த அவர், தனது மகளின் வீட்டை விட்டு தனது சகோதரனின் வீட்டிற்குச் சென்று, தங்கள் உறவு முடிந்துவிட்டதை பெஞ்சமினிடம் சொல்லுமாறு ஒரு நண்பரிடம் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த பெஞ்சமின், அவளைத் தேடி அண்ணன் வீட்டுக்குச் சென்றார். முதலில் அவள் இல்லை என்று பொய் சொல்லி அவளை அண்ணன் திருப்பி அனுப்பி வைத்தார்.
ஆனால் பெஞ்சமின் திரும்பி வந்து காதலியின் அண்ணனை கத்தியால் தாக்க ஆரம்பித்தார்.
இதனை கண்ட காதலி தடுக்க முயற்சித்தார். அப்போது அவரை சராமாறியாக தாக்கி கொலை செய்துள்ளதாக அவர் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.