நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலிப்பது கூட உங்களுக்குத் தெரியாதா என ராதிகாவிடம் தனுஷே கேட்டதாக ஆவணப்படத்தில் ராதிகா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது தனுஷ் கோபத்தில் உள்ளதாகவும்
நயன்தாராவின் டாக்குமென்டரியில் விஜய் சேதுபதி, ராணா டகுபதி, நாகார்ஜுனா, உபேந்திரா, அட்லீ, நெல்சன், ராதிகா சரத்குமார், தமன்னா, டாப்ஸி, பார்வதி உள்ளிட்ட பிரபலங்கள் பேசியுள்ள நிலையில், தனுஷ் நானும் ரவுடிதான் படக்காட்சிகளையும் பாடல்களையும் கொடுக்கவில்லை என நயன்தாரா புகார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்
இந்நிலையில் 3 செகண்ட் காட்சிக்கு 10 கோடி கேட்கிறார் தனுஷ் என்றும் நயன்தாரா குறிப்பிட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் BTS காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதே எப்படி என தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதேவேளை தமிழ் சினிமாவில் மறைமுகமாக நடிகர்கள் குறித்து நடிகைகள் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர். அட்ஜெஸ்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னதாக நயன்தாரா உள்ளிட்ட பலர் பேசினாலும் நடிகர்களின் பெயர்களை சொல்லமாட்டார்கள். ஆனால், சுயநலம் பிடித்தவர் தனுஷ் என்றும் அவர் முகமூடி போட்டுக் கொண்டு ஓம் நமச்சிவாயா என சொல்லி ஊரை ஏமாத்துகிறார் என இறங்கி அடித்த நிலையில், தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவுக்கு எதிராக திரண்டு விட்டனர். இதுவரை தனுஷ் மற்றும் அவரை சார்ந்தவர்கள் யாருமே நயன்தாராவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர் கருத்தை முன் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நானும் ரவுடி தான் காட்சிகள்: வேலையில்லா பட்டதாரி படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய விக்னேஷ் சிவனுக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருந்தார் தனுஷ். இன்ஜினியராக நடித்திருப்பார் விக்னேஷ் சிவன். மேலும், நயன்தாரா, விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பையும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலில் விழக் காரணமாக இருந்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா கூறிய நிலையில், தற்போது நானும் ரவுடி தான் படத்தின் மேக்கிங் வீடியோக்களை நயன்தாராவின் ஆவணப்படத்தில் எப்படி வைக்கலாம் என்று தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.