CID யில் முன்னிலையான ஹரின் பெர்னாண்டோ!

tubetamil
0

 முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.



குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 


கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையிலேயே அவர் cid இல் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் நேற்று (21) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினர். 


இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகித்த 18 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவுள்ளதாகக் குற்றப் புலனாய்வு திணைக்களம் அண்மையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தமாய் குறிப்பிடத்தக்கது..



இதே வேளை ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனும் இன்றைய தினம்  CID யில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top