ரவிசந்திரன் அஸ்வின் நடத்திய மாதிரி IPL மெகா ஏலத்தில், Marquee வீரர்கள் குழுவில் அதிக விலைக்கு ஏலம் போன முன்னணி 6 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த ஏலப்பட்டியல் தொடர்பான காணொளியொன்று தற்போது வெளியாகி உள்ளது.
இதில் ரிஷப் பண்ட் மட்டுமே ரூ.20 கோடிக்கு மேல் ஏலம் சென்றுள்ளதாக அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் தற்போது ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்காக பெர்த் நகரில் பயிற்சியில் இருக்கிறார்.இருப்பினும்,
இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்பு, அஸ்வின் தனது யூடியூப் சேனலில் ஒரு போலி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை தொகுத்து வழங்கினார். மோக் ஏல நிகழ்ச்சி மொத்தம் 6 எபிசோடுகளாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, Marquee Players ஏலம் விடப்பட்ட காணொளிகள் இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. அதாவது இந்த மாதிரி ஏலத்தில் 10 அணிகளில் இருந்து தலா 3 பேர் கலந்து கொண்டனர்
இதில் ஏலதாரர்களாக அஷ்வின் வட்டாரத்தைச் சேர்ந்த நண்பர்கள், கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், வர்ணனையாளர்கள் என மொத்தம் 30 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .