நைஜீரியாவில் (Nigeria) இடம்பெற்ற படகு விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கொகி மாநிலத்திலிருந்து நைஜரை (Niger ) நோக்கி 200க்கும் அதிகமானவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த படகே விபத்திற்குள்ளாகியது
இதில் சிக்கிய 100க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விபத்து இடம்பெற்று 12 மணித்தியாலத்தின் பின்னரும் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
இந்தநிலையில், அதிகளவு மக்களை ஏற்றும் போது போதியளவு பாதுகாப்பு இன்மையே படகு விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக அமைகிறது என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவது நைஜீரியாவில் கவலைக்குரிய விடயமாக மாறியுள்ளது.