"அரசியல் நோக்கங்களுக்காக மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து செல்பி எடுக்கும் அரசியல்வாதிகள் - விமர்சித்த சாணக்கியன் எம்பி!

tubetamil
0

சில அரசியல் வாதிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருவதாகஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 



கடந்த ஞாயிற்றுக்கிழமை  (24) மட்டக்களப்பு குருமண்வெளியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் 


குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மாவீரர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்துகின்ற மாதமாகும் எங்களுடைய மக்கள் ஒன்றிணைந்து மாவீரர் துகிலும் இல்லங்களை துப்புரவு செய்து வருகின்றார்கள். இவற்றைவிட சிலர் மாவீரர் துயிலும் இல்லங்களையும், மாவீரர்களையும் வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சில அரசியல்வாதிகள் மாவீரர் துயிலும் இல்லங்களை தாங்கள்தான் துப்புரவு செய்து கொண்டிருப்பதாகக் காண்பிப்பதற்காக அங்கு போய் படங்களை பிடித்து வெளிக்காட்டுகின்றார்கள். மாவீரர்களை அஞ்சலி செலுத்துவதற்கு மக்கள் தாங்களாகவே செய்வார்கள். இவ்வாறான அரசியல் நோக்கம் கொண்டு செயற்படுவது எமது நோக்கம் அல்ல என தெரிவித்துள்ளார்.


அத்துடன் இம்மாத 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்களோடு மக்களாக இருந்து நாங்களும் செயற்படுவோம். அந்த வீர மறவர்களுக்காக நாங்களும் மக்களோடு இருப்போம். மாறாக மாவீரர்களை வைத்து நாங்கள் அரசியல் செய்யப் போவது அல்ல. பலர் மாவீரர் குடும்பங்களை கௌரவிப்புச் செய்கின்றோம் என பலரிடம் பணம் பெற்றுள்ளார்கள் இதில் மக்கள் இதில் அவதானமாக இருக்க வேண்டும்.


அரசியல்வாதிகளாக உள்ள நாங்கள் செய்ய வேண்டிய பணி  அஞ்சலி நிகழ்வுகளை செய்யும்போது மக்களுக்கு அச்சுறுத்தல்கள் வருமாறு இருந்தால் நாங்கள் அதை பற்றி தட்டிக் கேட்க வேண்டும். தனி நாட்டுக்காக போராடிய ஒரு இனம் அந்தப் போராட்டத்திற்காக வாழ்க்கை அர்ப்பணித்தவர்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய நன்றிக்கடன் இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வு ஒன்றினை கோரிபயணிப்பது மட்டும்தான். அதனை நாங்கள் தமிழரரசுக் கட்சியாக முன்னெடுப்போம்.


அரசியல் தீர்வு வந்தால் மாத்திரம் தான் இந்த நாட்டிலே எமது தமிழ் மக்கள் உரிமையோடு கௌரவமாக தலைநிமிர்ந்து வாழலாம். இந்த நாட்டில் அரசியல் தீர்வு வந்தால் மாத்திரம்தான் அபிவிருத்தி, நாங்கள் விரும்பும் தேவைகளை செய்து கொள்ளலாம். இல்லையேல் தென்னிலங்கை அரசாங்கம் போடும் பிச்சையிலே தான்வாழ வேண்டும்.


இலங்கையில் உள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ் மக்கள் சரியாக வாக்களித்த மாவட்டம் ஒரே ஒரு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம்தான். ஜனாதிபதி அனுர குமாரதிசாநாயக்க அவருடன் கைலாங்கு கொடுத்த பிறகு அவர் என்னிடம் தெரிவித்தார் மட்டக்களப்பில் மாத்திரம் தான் எம்மால் முடியாமல் போய்விட்டது என்று சொன்னார். நான்  அதற்கு பதிலளித்தேன் அது என்னுடைய கையில்தான் இருக்கிறது. நாங்கள் கள்ள வழியில் செல்பவர்கள்; இல்லை, நாங்கள் கொலை செய்தவர்கள் இல்லை, நாங்கள் களவுகளில் ஈடுபட்டவர்கள் இல்லை, மக்களுக்கு முன் அவதூறாக செயற்பட்டவர்கள் நாங்கள் இல்லை என தெரிவித்தேன்.


எனக்கும் மக்கள் வாக்களித்த காரணம் என்னுடைய செயல்பாடு வைத்துதான் 65,000 வாக்குகள் என்பது ஒரு வரலாற்று சாதனையாகும் இந்த சாதனையை புரிந்த குருமணெ;வெளி மக்கள் உள்ளிட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top