தேங்காய் ஒன்றின் விலை250 ரூபாயிலிருந்து 300 ரூபா வரையில் உயரும் என கைத்தொழில் சபையின் தலைவர் ஜயந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கைத்தொழில்துறையினர் அதிக விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்வதால் நுகர்விற்கான தேவை அதிகரிக்கும் என தெரிவித்த அவர், கைத்தொழில் துறைக்காக 100 மில்லியன் தேங்காய்ப்பால், உறைந்த தேங்காய் துருவல் அல்லது துருவிய காய்ந்த தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்யுமாறு அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கத்திடம் சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் துண்டுகளாக்கப்பட்ட காய்ந்த தேங்காய்களை பயன்படுத்தி தேங்காய் எண்ணெய் தயாரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறித்த இதேவேளை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2021 மற்றும் 2024 க்கு இடையில் நாட்டின் தேங்காய் அறுவடையானது 700 மில்லியனுக்கும் அதிகமான தேங்காய்களினால் குறைந்துள்ளது எனவும், தொடர்ந்து தேங்காய் தட்டுப்பாடு காரணமாக தேங்காய் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.