பூமிக்கு வந்த ஆபத்து விலகினாலும், நிலவுக்கு புதிய சவாலாக உயர்ந்து வருகிறது 2024 YR4 எனும் விண்கல். கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டறியப்பட்ட இந்த விண்கல் தற்போது நாசா மற்றும் பிற விண்வெளி ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
முதலில், இந்த விண்கல் பூமியைத் தாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்திய ஆய்வுகளில் அது தவறான தகவலாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், நிலவுக்கு இது ஒரு சிறிய மோதலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கல் 2024 YR4 என அடையாளம் காணப்பட்டது. இது 2023 டிசம்பரில் சிலியில் உள்ள நாசாவின் ஆய்வு மையத்தில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. இது வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையிலான விண்கல் குவியலில் இருந்து சூரியனை நோக்கி வந்ததாக கூறப்படுகிறது.
நிலவை மோதுவதற்கான சாத்தியம் சுமார் 1.7 முதல் 2% வரை இருக்கக்கூடும் என நாசா கூறியுள்ளது. இதனால் நிலவுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், தூசி மற்றும் மணல் படலங்கள் பரவக்கூடும் என்றூ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில், நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி தற்போது இந்த விண்கல்லின் திசையை தொடர்ந்து கண்காணிக்க திருப்பப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளை மேலும் தெளிவான தகவல்களைப் பெற உதவுகிறது.
பூமிக்கு நேரும் அபாயம் தள்ளிப் போனாலும், நிலவுக்கு 2024 YR4 என்ற விண்கல் ஒரு சிறிய சவாலாகவே இருக்கிறது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிலவின் பரப்பளவிலும் அதனோடு தொடர்புடைய சுற்றுச்சூழலிலும் புதிய தகவல்களை வழங்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் கூடுதல் தகவல்களை நாசா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.