தமிழ் சினிமாவின் 80களின் பொன்னேன்றும், 90களின் கனவுக் கன்னியேன்றும் அழைக்கப்பட்டவர் நடிகை குஷ்பு. பாலிவுட்டில் இருந்து தமிழுக்கு வந்து தனக்கென ஒரு ராஜ்ஜியம் அமைத்தவர். ரசிகர்கள் கோவில் கட்டிய மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக மக்களிடையே நல்ல நினைவுகளை பதித்து வைத்திருக்கும் நடிகை.
சினிமா மட்டுமல்லாமல் அரசியல், சமூக பணிகள் என பல துறைகளில் தன்னைத் தவழ விட்ட இவர், தற்போது மீண்டும் தனது பழைய களத்திற்கு திரும்பியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையைத் தேர்வு செய்துள்ள அவர், டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ‘சரோஜினி’ என்ற புதிய தொடரில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
இந்த தொடர் ஏப்ரல் 14 முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு நாளும் இரவு 9.05 மணிக்கு இதைப் பார்க்கலாம்.
குஷ்புவின் இந்த சின்னத்திரை கம்-பேக் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது நம்பிக்கையான நடிப்பு, ‘சரோஜினி’ கதாபாத்திரம் எப்படியிருக்கும் என்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..